சுடுமணல்

Archive for April 2015

இப்படியான புத்தாண்டுக்கு ஓரிரு நாட்களின் முன்னரேதான் நான் “சொப்பிங் பாக்” உடன் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவினேன். “சாப்பிட்டிட்டுப் போவன்ரா” என எனது அம்மா கால்நீட்டியபடி திண்ணையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தாள். “பிறகு வந்து சாப்பிடுறன்” என்று பொய் சொன்னேன். “அப்ப தண்ணியாவது குடிச்சுட்டுப் போவன்ரா” என்றாள். கடைசியாக எனது கடைசி அக்காளிடமிருந்து தேசிக்காய்த் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டேன். புத்தாண்டு தினத்தில் (1984 இல்) நான் புளொட் இயக்கத்தின் படகில் ஏறினேன்.

Read the rest of this entry »

– எனது வாசிப்பு

malathi book

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.

புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

Read the rest of this entry »



  • Sivashankar.A.S.Bala: மிகவும் நல்ல பதிவு... தீவிரவாத வன்முறைகள், கொடுமைகள் என்
  • Suthakaran.G: http://anupoothy.blogspot.ch/2015/01/blog-post_18.html மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது
  • Bunni: திரு அசோக் அவர்களுக்கு ! நான் சார்ந்திருந்த மனிதம் குழு